|
Monday, 12 July 2010 06:45 |
சென்னை, ஜூலை 8: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நரேஷ், இணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் பொது நூலகத் துறையின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மெட்ரிக் கல்வி இயக்குநர் மணி, தொடக்கக் கல்வி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். தொடக்கக் கல்வி இயக்குநர் தேவராஜன், மெட்ரிக் கல்வி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதே சமயத்தில் பள்ளிக் கல்வித்துறையில் 3 இணை இயக்குநர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் புதிய பொறுப்பு விவரம்:(பழைய பொறுப்பு அடைப்புக் குறிக்குள்): எஸ்.கார்மேகம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்-ஆர்எம்எஸ்ஏ, இணை இயக்குநர். (மேல்நிலைக் கல்வி, இணை இயக்குநர்). பழனிச்சாமி, மேல்நிலைக் கல்வி, இணை இயக்குநர். (தொடக்கக் கல்வி, இணை இயக்குநர்). சேதுராமவர்மா, தொடக்கக் கல்வி, இணை இயக்குநர். (அரசுத் தேர்வுகள் துறை மேல்நிலைக் கல்வி, இணை இயக்குநர்). அரசு தேர்வுத்துறை மறுமதிப்பீடு இணை இயக்குநராக உள்ள கருப்பசாமி, அரசு தேர்வுகள் துறை மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து கொள்வார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குற்றாலிங்கம் பிறப்பித்துள்ளார்.
|
|
|
Saturday, 10 July 2010 06:42 |
|
திருவண்ணாமலை : துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக தமிழாசிரியர் இல்லாததால் மாணவ, மாணவியர் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். திருவண்ணாமலையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது மங்கலம் கிராமம். இது மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை-வந்தவாசி சாலையில் உள்ள இக்கிராமத்தில் கடந்த 1961-ம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. |
|
Read more...
|
|
Saturday, 10 July 2010 06:39 |
|
திருச்சி : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலைமை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும், வேறு சில பல்கலைக்கழகங்களிலும் தேர்வு முடிவுகள் மே, ஜூன் மாதத்திலேயே வெளியாகிவிட்டன. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் (பி.காம்.) தேர்வு முடிவு மட்டும் ஜூலை 2-ம் தேதி வெளியானது. "பி.பி.ஏ., பி.பி.எம். தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 5) வெளியானது. மற்றத் துறைகளின் தேர்வு முடிவுகள் இரு நாள்களில் வெளியிடப்படும்' என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் எஸ். ஸ்ரீதரன். |
|
Register to read more...
|
|
|
Saturday, 10 July 2010 06:41 |
சென்னை, ஜூலை 5: சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா கல்லூரிகளும் நல்ல கல்லூரிகள்தான் என்ற எண்ணத்தில் அவற்றில் மாணவர்கள் சேர வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி கூறினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பி.இ. கலந்தாய்வு தொடக்கத்தின் போது அமைச்சர் க.பொன்முடி கூறியது: |
|
Read more...
|
|
Thursday, 08 July 2010 07:02 |
|
என்ன படிக்க : டி-பார்மஸி ’கம்பவுண்டர்’ என்று 1950, 1960-களிலும், மருந்தாளுநர், என்று தற்காலகத் தமிழிலும், பார்மஸிஸ்ட் என்று ஆங்கிலத்திலும், ‘சதலி’ அல்லது ‘தபீப் மால் சதலியே’ என்று அரபியிலும் அழைக்கப்படும், இந்த படிப்பு (D PHARM) படித்தவர்கள் பற்றி தெரிந்து கொள்வோமா? மருத்துவர்களே மருந்துகளையும் தயாரித்து பழங்காலத்தில் தொடங்கி டிஸ்பென்சரிகளில் இருந்து தயாரித்து வழங்கிய 1960-கள் வரை, இந்த மருந்தியல் டிப்ளமோ படித்தவர்களின் சேவை மகத்தானது. தற்சமயம் அனைத்து மருந்துகளும் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுவதால், மருந்தாளுநர் முழுக்க முழுக்க மருந்து விநியோகிப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
|
|
Read more...
|
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 Next > End >>
|
|
Page 1 of 6 |