Login Form



சீடர் பாதம் கழுவும் நிகழ்ச்சி
Monday, 05 April 2010 06:38
நாகப்பட்டினம், ​​ ஏப்.: ​ நாகை மாவட்டம்,​​ வேளாங்கண்ணி பேராலயத்தில்,​​ சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
​ ​ ​ இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளிக்கு முதல் நாள் பெரிய வியாழன் எனக் குறிப்பிடப்படுகிறது.​ மேலும்,​​ இயேசு பிரான் குருத்துவத்தையும்,​​ நற்கருணையையும் ஏற்படுத்திய நாளாகவும் பெரிய வியாழன் குறிப்பிடப்படுகிறது.
​ ​ ​ இயேசு சிலுவையில் அறையப்படும் முன்,​​ தனது ​ சீடர்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்தியதை நினைவு கூரும் வகையில்,​​ வேளாங்கண்ணி பேராலயத்தில் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
​ ​ ​ முன்னதாக,​​ வேளாங்கண்ணி பேராலயக் கலையரங்கில் பேராலய அதிபர் ஏ.​ மைக்கில் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
​ ​ ​ இதைத் தொடர்ந்து,​​ பேராலய துணை அதிபர் ஆரோக்கியதாஸ் இறை மக்கள் 12 பேரின் பாதங்களைக் கழுவினார்.
​ ​ ​ பேராலயப் பொருளாளர் தார்சீஸ் ராஜ் அடிகளார்,​​ இல்லப் பொறுப்பாளர் முத்துசாமி அடிகளார்,​​ உதவிப் பங்குத் தந்தைகள் ஜான்சன் எட்வர்ட்,​​ தாஸ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொண்டன
 
சித்திரை திருவிழா: ஏப்ரல் 16-ல் கொடியேற்றம்
Friday, 19 March 2010 05:12
மதுரை, மார்ச் : மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலின் மிக முக்கியத் திருவிழா சித்திரைத் திருவிழாவாகும். இத்திருவிழாவைக் காண இந்திய அளவில் மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் மதுரைக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றம், ஏப்ரல் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.40 மணி முதல் 10.05 மணிக்குள் நடைபெறுகிறது. கோயிலில் சுவாமி சன்னதி முன் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்படுகிறது.
அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருவிழாவின் நிறைவாக ஏப்ரல் 27-ம் தேதி சுவாமி, அம்மன் தேர்த்தடம் பார்க்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 
திருப்பதி "விரைவு தரிசனம்" : அக்டோபர் 1முதல் ரூ.300
Friday, 18 September 2009 13:29
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விரைவு தரிசன முறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

                திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஆதிகேசவலு நாயுடு தலைமையில் திருமலை அன்னமய்யா பவனில் நேற்றுமாலை நடைபெற்றது.

Register to read more...
 
கோயில் சொத்து : இணைய தள வெளியீடு
Friday, 19 March 2010 05:08

திருவண்ணாமலை, அனைத்து கோயில்களின் சொத்துகள், அவற்றை அனுபவிப்பவர்கள் குறித்த விவரம் விரைவில் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.ஆர்.சம்பத் கூறினார்.

Register to read more...
 
சி.எஸ்.ஐ. திருச்சபை பிஷப் : கோர்ட்டு உத்தரவு
Friday, 18 September 2009 13:21
சென்னை, சென்னை சி.எஸ்.ஐ. சபையில் புதிய பிஷப் நியமனம் செய்யப்படும் வரை தேவசகாயம் காபந்து பேராயராக நீடிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

                ‘‘சி.எஸ்.ஐ. அமைப்புச் சட்டத்தின் 12-பி ஷரத்தின்படி, ஒருவர் பேராயராக பதவி ஏற்றுக் கொண்டாலே, அவர் தனது 65 வயது வரை அந்தப் பதவியில் நீடிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. எனவே 65 வயது வரை பேராயராக தேவசகாயம் நீடிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

Register to read more...
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 1 of 4
 
  Advertisement Tarif | Copyright © 2009 www.tamizhankural.com. All Rights Reserved.

Design by Techcmantix Technologies
 
 
     
 
   
Design by go-vista.de and augs-burg.de