|
செய்திகள் -
அரசியல்
|
|
Tuesday, 31 August 2010 09:26 |
|
புது தில்லி, ஆக.26: எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எம்.பி.க்கள் தங்களது சம்பளத்தை தாங்களே உயர்த்திக் கொள்வது இழிவான செயல் என்று அவர் விமர்சித்துள்ளார். இதுபோன்று நாட்டில் எந்த துறையை சேர்ந்தவர்களும் தங்களது சம்பளத்தை தாங்களே உயர்த்திக் கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டிய அவர், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். எம்.பி.க்களின் சம்பள உயர்வு தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அதை நிச்சயம் எதிர்ப்பேன் என்றும் அவர் கூறினார். |
|
Read more...
|
|
|
செய்திகள் -
அரசியல்
|
|
Tuesday, 31 August 2010 09:25 |
|
சென்னை ஆக.26 தமிழ்நாட்டின் அரசு பொறுப்புக்களில் இருந்து அ.தி.மு.க., தி.மு.கவை அகற்றி விட்டு எனது தலைமையிலான புதிய ஆட்சியை அமைப்பேன் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தனது பிறந்தநாள் நாளை முன்னிட்டு கேப்டன் டி.வி.யில் விஜயகாந்த் அளித்துள்ள பேட்டி: தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளான அ.தி.மு.கவும், தி.மு.க.வும் தோழமை கட்சி ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. இவர்களை ஆட்சியில் அமர செய்ததன் பலனை எந்த வகையிலும் தமிழ்நாடோ, தமிழர்களோ அனுபவிக்கவில்லை. |
|
Read more...
|
|
செய்திகள் -
அரசியல்
|
|
Monday, 12 July 2010 06:43 |
|
சென்னை, ஜூலை 8: சென்னையில் உள்ள சட்டப் பேரவைக்கு வர முடியாதவர்கள் அங்கு நடக்கும் சூடான, சுவையான விவாதங்களை புத்தகங்களாகப் பெற முடியும். அதுவும், ஒரு டீ-யின் விலையை விடக் குறைவாக 3 ரூபாய்க்கே கிடைக்கிறது. ஆனால், இந்தப் புத்தகங்கள் இத்தனை குறைவான விலைக்குக் கிடைக்கிறது என்பதும், அதில் உள்ள அரிய தகவல்களும் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதே கவலை அளிக்கும் விஷயம். தமிழக சட்டப் பேரவைக்கென்று பாரம்பரியமிக்க வரலாறு உண்டு. பேரவையில் குளிர்காலத் தொடர், பட்ஜெட் தொடர் என பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வர். பேரவை மாடத்தில் அமர்ந்து சிறப்பு அழைப்பாளர்களும், பொது மக்களும் பேரவை நிகழ்வுகளைக் கவனிப்பர். |
|
Read more...
|
|
|
செய்திகள் -
அரசியல்
|
|
Tuesday, 13 July 2010 13:02 |
|
அறிவோம் அரசியல்: தேர்தல் ஒப்பந்தம் : படையச்சி + தி.மு.க. சென்னை பதவிக்காக “கட்சித்தாவல்” என்ற சுயநல பாரம்பரியத்தை இந்தியாவிலேயே 1952ல் முதன் முதலாக தொடங்கி வைத்த சந்தர்ப்பவாதப் பெருமை படையாச்சி கட்சிக்குத்தான் உண்டு என தமிழக அரசியல் களம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சிக்கான 2011 தேர்தல் கூட்டணி உண்டா? இல்லையா? என்ற முடிவை அறிய ‘பலரும்’ ஆவலுடன் உள்ளனர். கூட்டணி குறித்து தி,மு,க,வுடன் பேசுவோம், பேசுவோம், பேசிக்கொண்டே இருப்போம்., கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக்கொண்டே இருங்கள் என்று மருத்துவ ராமதாஸ் கூறியுள்ளார். இது மட்டுமல்லாது, அரசியலில் நிரந்தர நண்பனுமல்ல, நிரந்தர எதிரியுமில்லை என்று விளக்கியுள்ளார். அதாவது தேர்தல் காலங்களில் கூட்டணி மாறுவது இயற்கையான ஒன்றுதான் என்றும் தி.மு.க. கூட ராஜாஜியை ஆதரித்துள்ளது. என்றும் `நெஞ்சுக்கு நீதி`யில் இருந்து எல்லாம் விளக்கினார். இந்த உண்மையான அரசியல் வரலாறு குறித்து அறிந்து கொள்வது நியாயமல்லவா?
|
|
Read more...
|
|
செய்திகள் -
அரசியல்
|
|
Monday, 12 July 2010 06:41 |
கொழும்பு, ஜூலை 8-
கொழும்புவில் ஐ.நா. அலுவலகம் முன்பு அமைச் சர் தலைமையில் நடந்த எதிர்ப்பு இயக்கத்துக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இதன் விளை வாக ஐ.நா. அலுவலக ஊழி யர்களும் மற்றவர்களும், ஐ.நா. அலுவலகத்திற்குள் செல்லவோ, வெளியே வரவோ முடியவில்லை.
இலங்கை அரசு விடுத லைப்புலிகளுடன் நடத்திய போரின்போது அரசு மனித உரிமை மற்றும் மனித நேய உதவிச் சட் டங்களை மீறியதாகக் கூறப்படும் குற்றச் சாட்டுக்களின் நம்பகத்தன்மை குறித்து ஆலோசனைக் கூறுவதற்காக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி - மூன் நியமித்த மூவர் குழுவை எதிர்த்து கொழும் புவில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
|
|
Read more...
|
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
|
Page 1 of 18 |