|
Tuesday, 01 June 2010 00:00 |
|
1.நவீன பாரதத்தின் இளம் தலைவர் ராஜீவ்,அந்நிய நாட்டு கொலையாளிகளால் நம் தை நாட்டிலேயே கொல்லப்பட்டார்.குற்றம் சாட்டப்பட்ட பலரும் நம் சட்டத்தின் கையில் சிக்கவில்லை. அகப்பட்டு கொண்ட நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட, ஏறத்தாழ 20 ஆண்டு களம் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
2.நம் தாய்நாட்டின் பாராளு மன்றத்தை தாக்கி,தலைவர்கள் அனைவரையும் கொள்ள முயற்சித்த அப்சல் குருவுக்கும் மரணதண்டனை விதிகபட்டது அனால் இன்றுவரை நிறைவேற்ற படவில்லை.
3.தீவிர வாத பாகிஸ்தானிய கும்பல் மும்பையில் 200 மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்தது. வீரத்திற்கும் தீரத்திற்கும் பெயர் பெற்ற நமது ராணுவத்தால் தீவிரவாதிகள் கொல்லப்பட,அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.மூன்று நாட்கள் நடத்திய கொடூர கொலைகளை கண்டு உலகமே கண்ணிர் வடித்தது.ஆனால் அவற்றை அரங்கேற்றிய அஜ்மல் கசாப் குற்றவாளிதான் என்று சொல்வதற்கு ஏறதாழ 18 மாதம் ஆனது.அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை என்று தீர்ப்பு கூற மேலும் 2 நாள் ஆனது. அந்த தீர்ப்பும் நிறை வேற மேலும் எத்தனை வருடம் ஆகுமோ? அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
ஏனிந்த அவலம் !நீதி மன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் தண்டனை நிறைவேறாததற்கு நம் சட்ட அமைப்புகள் தான் காரணமா? இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு உள்நாட்டு தீவிரவாதங்களை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். தீவிரவாதிகளுக்கு தண்டனை காலதாமதம் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே இந்திய இறையாண்மைக்கு எதிரான தீவிரவாதத்திற்கு நாம் தரும் சரியான பதிலடி.உடனடி தீர்ப்பும் கால தாமதமில்லாத தண்டனை நிறைவேற்றலும் மட்டுமே திவிரவாதத்தை ஒழிக்க ஒரேவழி!
ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?
இணையதள ஆசிரியர்.
|