|
பழநி உண்டியல் வசூல் : ரூ.1.19 கோடி |
|
Wednesday, 16 December 2009 08:41 |
|
பழநி: பழநி கோவில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 19 லட்ச ரூபாயை எட்டியது. பழநி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோவிலில் எண்ணப்பட்டது. ரொக்கம் ஒரு கோடியே 18 லட்சத்து 71 ஆயிரத்து 634 ரூபாய். 1,178 கிராம் தங்கம். 6,933 கிராம் வெள்ளி. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள் 692.
தங்க வேல், செயின், பாதம், நாணயங்கள், திருமாங்கல்யம், ஓம், வெள்ளியாலான செயின், வேல், வீடு, முருகனின் திருஉருவம், காவடி, கொலுசு, தடி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. 101 கிராம் எடையுள்ள வெள்ளியாலான மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்தார். பரிவட்டங்கள், ஏலக்காய் மாலை, பித்தளையாலான பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது. மேற்கண்ட வசூல் 45 நாட்களில் கிடைத்ததாகும். இணை ஆணையர் ராசமாணிக்கம், துணை ஆணையர் மங்கையற்கரசி, திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் அழகர்சாமி, அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி பொன்னுச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
|