|
சென்னை: மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., இலவச பயிற்சி மையத்தில், சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு பயிற்சி மற்றும் இலவச மாதிரித் தேர்வு வகுப்புகள் ஆரம்பமாகின்றன. சென்னை சி.ஐ.டி., நகரில், சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாண்டு அண்ணா நகரில் புதிய மையம் துவக்கப்பட்டு, 800க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 300 மாணவர்கள் அமர்ந்து கவனிக்கும் வகையிலான வகுப்பறை வசதிகள் உள்ளன.
ஐ.ஏ.எஸ்., தேர்வுகளை இரண்டு, மூன்று முறை தொடர்ந்து எழுதி வருபவர்களுக்கும், வகுப்பகளில்லாமல் தேர்வுகள் மட்டும் போதும் என்றென்னுகிறவர்களுக்கும், மையத்தில் சேர இயலாமல் போனவர்களுக்கும் உதவும் வகையில், "இலவச மாதிரித் தேர்வு' வகுப்புகள், வரும் 14ம் தேதி துவங்கவுள்ளது. வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் மற்றும் பொதுப்பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முடித்துள்ள மாணவர்களுக்கான மாதிரி நேர்முகத் தேர்வுப் பயிற்சி, ஆளுமை மேம்பாடு வகுப்புகளை இலவசமாக நடத்தவுள்ளது. தேசிய நிகழ்வுகள், சர்வதேச நிகழ்வுகள், வெளியுறவுக் கொள்கை மற்றும் சமூக பிரச்னைகள் பற்றிய சிறப்பு வகுப்புகள் இப்பயிற்சியில் அடங்கும். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், இன்று முதல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., அண்ட் ஐ.பி.எஸ்., இலவச பயிற்சி மையம், 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி., நகர், சென்னை - 600 035 என்ற முகவரியில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
|