Login Form



பிரான்ஸ் - பிரேசில் ; அணுசக்தி ஒப்பந்தம்
Thursday, 10 September 2009 06:53
பாரீஸ், பிரேசிலின் இரு நிறுவனங்க ளுக்கு அணு ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி பிரேசில் பயணம் மேற் கொண்ட போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

                .இதன்படி பிரான்சின் ஜிடிஎப் கயஸ் நிறுவனம், பிரேசில் அணுமின் தொழிற்சாலை மேம்பாட்டுக்கு உதவும்.

 பிரேசிலின் சுதந்திர தின ராணுவ அணி வகுப்பு விழா, தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சர்கோஸி கலந்து கொண்டார். பிரே சில் ஜனாதிபதி இனாசியோ லூலா அவரை வரவேற்றார். அந்த நாளில் இரு நாடுகள் இடையே அணு ஒப் பந்தம் கையெழுத்தானது. சர்கோஸி யின் பயணத்தை தொடர்ந்து பிரான்ஸ், பிரேசில் இடையே இராணுவ மற்றும் தொழில்நுட்ப உறவுகளும் மேற்கொள்ளப்படும் சூழல் உருவானது.

                பிரேசில் 36 போர் விமானங்களை 200 கோடி டாலர் மதிப்பீட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானங்களை உருவாக்க 3 நிறு வனங்களின் பெயர்கள், லூலாவின் பரிசீலனையில் உள்ளன. இதில் ஒரு நிறுவனம் பிரான்ஸின் தாசல்ட் ஆகும்.
 
Banner
Banner
Banner
 
  Advertisement Tarif | Copyright © 2009 www.tamizhankural.com. All Rights Reserved.

Design by Techcmantix Technologies
 
 
     
 
   
Design by go-vista.de and augs-burg.de